உங்களுக்குத் தெரிந்த சாதனையாளர்களை பரிந்துரை செய்யுங்கள்! ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு!

Estimated read time 1 min read

நம் நாட்டின் உயரிய விருதாக கருதப்படுவது பாரத் ரத்னா. அதற்கு, அடுத்தப்படியாக பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும்.

1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள், கலை, சமூக சேவை, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் 2027-ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேசிய விருதுகள் இணையதளமான https://awards.gov.in என்ற தளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இது தொடர்பான விரிவான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான https://mha.gov.in மற்றும் பத்ம விருதுகளுக்கான இணைய தளமான https://padmaawards.gov.in என்ற தளத்திலும் உள்ளன. விருதுகள் தொடர்பான விதிகள் ② https://padmaawards.gov.in/AboutAwards.aspx வெளியிடப்பட்டுள்ளன.

இதேபோன்று, ராஷ்டிரீய புரஸ்கார் வலைத்தளத்தில் உள்ள படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, 800 வார்த்தைகளுக்கு மிகாமல் பாராட்டு பத்திரமும் எழுதி, ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். மற்றவர்களுக்காக பரிந்துரைகளும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

You May Also Like

More From Author