வரும் 30-ம் தேதி 232 வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு..!

Estimated read time 1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 30-ஆம் தேதி தன்னுடைய கட்சி வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் மட்டும் சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து உள்ளனர். இவர்கள் திமுக மற்றும் அதிமுக வாக்குகளை பிரிப்பார்கள் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் வரும் 30-ஆம் தேதி தன்னுடைய கட்சி வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஏற்கனவே தேர்தல் முடிந்த பிறகு (ஏப்ரல் 24) மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author