தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மேலும், வரும் 12ஆம் தேதி வரை, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தி.மலை, சேலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று கனமழையும், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தி.மலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.