அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சட்டவிரோத ராணுவ நடவடிக்கை ஹோர்முஸ் நீரிணை முற்றுகைக்கான மூலக்காரணம்

ஹோர்முஸ் நீரிணை முற்றுகைக்கான மூலக்காரணமானது ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சட்டவிரோத ராணுவ தாக்குதலை மேற்கொண்டதாகும். பன்முகமான நிலையான போர் நிறுத்தத்தைக் கூடிய விரைவில் நனவாக்குவது இதற்கான தீர்வு ஆகும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபுஸுன் 27ஆம் நாள் பாதுகாப்பவையின்  கடல்சார் பாதுகாப்பு பிரச்சினை பற்றிய உயர் நிலை விவாதக் கூட்டத்தில் உரைநிகழ்த்திய போது சுட்டிக்காட்டினார்.

ஹோர்முஸ் நீரிணை முக்கியமான சர்வதேச சரக்கு மற்றும் எரியாற்றல் வர்த்தகத்தின் பாதையாகத் திகழ்கிறது. இப்பிரதேசத்தின் பாதுகாப்பு, நிதானம் மற்றும் தங்கு தடையற்ற போக்குவரத்தைப் பேணிக்காப்பது சர்வதேச சமூகத்தின் பொது நலன்களுக்குப் பொருந்தியதாகும். பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தை முன்னேற்றுவதில் சீனா தொடர்ந்து பயனுள்ள பங்களிப்பை ஆற்றும் என்று ஃபுஸுன் மேலும் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author