இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை வரும் 2027 ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 81-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2027 ஆகஸ்ட் 15 அன்று புல்லட் ரயில் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இந்த ரயில் மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் குஜராத்தின் அகமதாபாத் ஆகிய இரு முக்கிய நகரங்களை இணைக்கும்.
புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ முதல் 350 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.
இதன் மூலம் மும்பை – அகமதாபாத் இடையேயான பயண நேரம் தற்போதைய 6-8 மணி நேரத்திலிருந்து வெறும் 2 முதல் 3 மணி நேரமாக குறையும்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: 2027 சுதந்திர தினத்தன்று தொடக்கம்!
