சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஏப்ரல் 12ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் பொறுபாளர் ஒருவர் கூறுகையில், இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 10 லட்சம் கோடி யுவானைத் தாண்டியது.
இது வரலாற்றில் முதல் காலாண்டில் பதிவான அதிகபட்ச சாதனையாகும்.
சீனச் சுங்கத் துறை வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 10 லட்சத்து 17 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. கடந்த ஆண்டில் இருந்ததை விட 5 விழுக்காடு அதிகமாகும்.
அத்துடன், அரசு சாரா தொழில் நிறுவனங்கள் மற்றும் அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை முறையே 10.4 மற்றும் 1 விழுக்காடு அதிகரித்தன.
மேலும், சீனப் பாரம்பரிய துறைகளும் புதிய துறைகளும் ஏற்றுமதியில் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளன.
முதல் காலாண்டில், மின்சார சாதான உற்பத்திப் பொருட்கள் மற்றும் உழைப்பு ஆற்றல் செறிந்த தொழில்களின் உற்பத்திப் பொருட்கள் சீரான ஏற்றுமதி போக்கினை நிலைநிறுத்தன.
வர்த்தகக் கூட்டாளிகளைப் பார்க்கும் போது, முதல் 3 மாதங்களில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் இணைந்துள்ள நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 4 லட்சத்து 82 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 5.5 விழுக்காடு அதிகரித்தது.
இதர 9 பிரிக்ஸ் நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை ஒரு லட்சத்து 49 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 11.3 விழுக்காடு அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.