பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது; 31வது சர்வதேச அங்கீகாரம்  

Estimated read time 1 min read

அரசுமுறைப் பயணமாக ஸ்வீடன் நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார், கமாண்டர் கிராண்ட் கிராஸ் (Royal Order of Polar Star, Commander Grand Cross) விருது வழங்கி ஞாயிற்றுக்கிழமை (மே 17) கௌரவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளால் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் 31ஆவது உலகளாவிய உயரிய அங்கீகாரம் இதுவாகும்.
இந்தத் தனித்துவமான விருதானது, வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்களுக்கு ஸ்வீடன் அரசால் வழங்கப்படும் மிக உன்னதமான கௌரவமாகக் கருதப்படுகிறது.

You May Also Like

More From Author