ஜியூஷி இதழில் சீன அரசுத் தலைவரின் முக்கிய கட்டுரை வெளியீடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வின் வழிகாட்டல் கோட்பாட்டை மாநில மற்றும் அமைச்சர் நிலை தலைவர்களும் ஊழியர்களும் கற்றுக் கொண்டு செயல்படுத்துவதற்கான சிறப்பு பயிலரங்கில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங்கின் உரை ஜியூஷி இதழில் மே முதல் நாள் வெளியிடப்பட உள்ளது.

ஐந்தாண்டு திட்டத்தை வகுத்து செயல்படுத்துவது சீனாவின் முக்கிய அரசியல் ஆதாயத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்று இக்கட்டுரையில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில் செய்யப்பட்ட உத்திநோக்கு ஏற்பாடுகளை பன்முகங்களிலும் ஆழமாகவும் துல்லியமாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமையில் ஏற்படும் புதிய மாற்றங்களை கூர்மையுடன் புரிந்து கொள்ள வேண்டும். நவீன தொழிற்துறை முறைமையை உறுதியுடன் கட்டமைக்க வேண்டும்.

புதிய வளர்ச்சி கட்டமைப்பின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதன் மூலம் உத்திநோக்கு முன்னுரிமையைப் பெற வேண்டும். ஒருங்கிணைந்த பொருளாதர மற்றும் சமூக வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author