பெய்ஜிங்கில் நடைபெற்ற சௌதி அரேபியா-ஈரான் பேச்சுவார்த்தைக்கான நிறைவு விழாவுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் தலைவருமான வாங்யீ மார்ச் 10ஆம் நாள் தலைமைத் தாங்கினார். சௌதி அரேபியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஈரானின் உச்ச நிலை பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் உள்ளிட்டோரும் இவ்விழாவில் பங்கெடுத்தனர்.
சௌதி அரேபியாவும் ஈரானும் வரலாற்றுத் தன்மையுடைய முன்னேற்றத்தைப் பெற்று, இரு நாட்டுறவின் மேம்பாட்டில் பெரும் சாதனையைப் பெற்றதற்கு வாங்யீ வாழ்த்து தெரிவித்தார். மேலும், இரு தரப்பும் உருவாக்கிய உடன்படிக்கைக்கிணங்க இனிமையான எதிர்காலத்தைத் துவக்கி வைப்பதற்குச் சீனா ஆதரவு அளிப்பதோடு, இரு நாடுகளின் நம்பத்தக்க நண்பரான சீனா, தொடர்ந்து ஆக்கபூர்வப் பங்காற்றும் என்றார்.
அதேநாள், சௌதி அரேபியா மற்றும் ஈரான், பெய்ஜிங் உடன்படிக்கையை உருவாக்கின. அதோடு, சீனா, சௌதி அரேபியா, ஈரான் ஆகிய 3 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்ட கூட்டறிக்கையில், சௌதி அரேபியா மற்றும் ஈரான் தூதாண்மை உறவை மீண்டும் தொடங்க ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 நாடுகளும் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டைப் பேணிக்காத்து, சர்வதேச மற்றும் பிரதேச அமைதியையும் பாதுகாப்பையும் முன்னேற்றும் என்றும் இக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.