7வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 10ம் நாள் மாலை ஷாங்காய் மாநகரில் நிறைவடைந்தது.
நடப்பு பொருட்காட்சியில் விருப்ப பரிவர்த்தனைத் தொகை, 8001 கோடி டாலரை எட்டி, கடந்த பொருட்காட்சியை விட 2 விழுக்காடு அதிகம். 10ம் நாள் மதியம் 12 மணி வரை, இப்பொருட்காட்சி அரங்கில் மொத்தம் 8.52 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
உலகளவில் 77 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரநிதிக் குழுக்கள், இப்பொருட்காட்சியின் தேசிய நிலைக் கண்காட்சியில் பங்கெடுத்தன. இது கடந்த இறக்குமதி பொருட்காட்சியைத் தாண்டியது.
புதிய தரவுகளின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பங்கெடுத்த 104 நாடுகளைச் சேர்ந்த 1585 தொழில் நிறுவனங்களும், வளர்ச்சி மிக குன்றிய 35 நாடுகளைச் சேர்ந்த 132 தொழில் நிறுவனங்களும், நடப்பு இறக்குமதி பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. தற்போது வரை 8வது சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த பொருட்காட்சியின் பரப்பளவு 1 இலட்சம் சதுரமீட்டரைத் தாண்டும் என தெரிவிக்கப்பட்டது.
படம்:VCG