மகளிர் T20 உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அறிவிப்பு..!!

Estimated read time 0 min read

2026ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

இதில், இந்தியா, இங்கிலாந்து உள்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.

குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல, குரூப் 2ல் இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளன.

இந்திய அணி ஜூன் 14ம் தேதி விளையாடும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணியில் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, முக்கிய ஆல் ரவுண்டரான அமன்ஜோத் கவுருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அணி விபரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்)

ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்)

ஷபாலி வர்மா

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

பாரதி புல்மாலி

தீப்தி சர்மா

ரிச்சா கோஷ்

யாஸ்திகா பாட்டியா

ராதா யாதவ்

ஸ்ரேயங்கா பாட்டீல்

நந்தினி சர்மா

அருந்ததி ரெட்டி

ரேணுகா தாக்கூர்

கிராந்தி கவுட்

ஸ்ரீ சரணி

You May Also Like

More From Author