அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் பல இந்திய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தப் பயணம் டிசம்பர் 12 அன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. அங்கே மெஸ்ஸிக்கு 70 அடி உயர சிலை திறக்கப்பட்டு, ஈடன் கார்டனில் GOAT இசை நிகழ்ச்சி மற்றும் GOAT கோப்பை நிகழ்வு நடைபெறும்.
கொல்கத்தாவில், மெஸ்ஸி சௌரவ் கங்குலி, லியாண்டர் பயஸ், பைசுங் பூட்டியா மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் போன்ற இந்திய பிரபலங்களுடன் ஏழு பேர் கொண்ட ஒரு நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்பார்.
மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரை கௌரவிப்பார்.
டிசம்பரில் இந்தியா வருகிறார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி
