தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாரம்பரியங்களை போற்றவும், ஒற்றுமையை வலுப்படுத்தவும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக அவர், தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இருளை வென்ற ஒளியின் வெற்றியையும், தீமையை வென்ற நன்மையின் வெற்றியையும் கொண்டாடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், வளர்ந்த நாட்டை கட்டமைக்க அனைவரும் புது ஆற்றலுடனும், உறுதியுடனும் முன்னேற வேண்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை அனைவரது வாழ்விலும், மகிழ்ச்சி, செழிப்பு, உடல்நலம் மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும் என தமிழக மக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
