வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் மேகங்கள்; 12 ஏவுகணைகளால் அமீரகம் மீது தாக்குதல்  

Estimated read time 1 min read

மே 4 அன்று ஹார்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அடுத்தடுத்து நிகழ்ந்த ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் கடற்படை மோதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஈரான் தரப்பிலிருந்து ஏவப்பட்ட 12 ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இடைமறித்து அழித்துள்ளன.
இருப்பினும், புஜைராவில் நடந்த டிரோன் தாக்குதலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.
ஓமனில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், அமெரிக்காவின் “ராணுவ சாகசமே” இதற்குக் காரணம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார்.

You May Also Like

More From Author