பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுத் தேர்வுகள் தொடர்பான வினாத்தாள் கசிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுத் தேர்வுகள் சட்டத்திருத்த மசோதா, 2026-ஐ மத்திய அரசு நாளை மக்களவையில் அறிமுகப்படுத்துகிறது.
இந்த மசோதாவில், தேர்வு முறைகேடுகளுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதுடன், விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல், விரைவான விசாரணை உள்ளிட்ட புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
