இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவைப் பாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடர்ந்து இந்தியா மீது அதிருப்தியை வெளிப்படுத்தி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50% வரி விதித்தது.
இது இந்திய ஏற்றுமதியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இந்தியா கடுமையாக கண்டித்த நிலையில், டிரம்ப் இந்தியா-ரஷ்யா உறவுகளை பாதிக்க மேலும் முனைப்பைக் காட்டி வருகிறார்.
இந்தியா-ரஷ்யா உறவை முறிக்கும் முயற்சி தோல்வியடையும்: டிரம்ப் முயற்சிக்கு ரஷ்யா பதிலடி
