தமிழகத்தில் நிறைவு பெற்றது வாக்கு எண்ணிக்கை; 108 தொகுதிகளை கைப்பற்றியது TVK  

Estimated read time 1 min read

தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு வரலாற்றுத் திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
கடந்த 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு ஒரு புதிய கட்சி முன்னேறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலின் மிகப்பெரிய ஆச்சரியமாக, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.
ஆளும் கட்சியாக இருந்த திமுக, இம்முறை வெறும் 59 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author