சீனா, ஆசியான் நாடுகள், வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் நாடுகள் நடத்திய கூட்டத்தின் போது, உள்ளூர் நேரப்படி, 27ஆம் நாள் முற்பகல், சீன தலைமையமைச்சர் லீச்சியாங், கோலாலம்பூரில், கம்போடிய தலைமையமைச்சர் ஹன் மானேட் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சிறிது காலத்துக்கு முன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கம்போடியாவில் வரலாற்று தன்மை வாய்ந்த அரசு முறை பயணம் மேற்கொண்டார். கம்போடிய தலைமையமைச்சருடன் சேர்ந்து, புதிய யுகத்தில் பன்முக சீன-கம்போடிய பொது சமூகத்தை உருவாக்க அறிவுறுத்தினார். மனித குலத்தின் பொது சமூகக் கட்டுமானத்தின் முன்னணியில் இரு நாடுகள் உள்ளன. கம்போடியாவுடன் இணைந்து, ஷிச்சின்பிங் பயணத்தின் சாதனைகளை செயல்படுத்தி, உயர் நிலை பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பரஸ்பர அரசியல் நம்பிக்கையை ஆழமாக்க வேண்டும் என்று லீச்சியாங் தெரிவித்தார்.