2026 பெய்ஜிங் சியாங் ஷன் மன்றக் கூட்டத்துக்கான முன்னாய்வுக் கூட்டம் துவக்கம்

2026ஆம் ஆண்டு பெய்ஜிங் சியாங் ஷன் மன்றக் கூட்டத்துக்கான முன்னாய்வுக் கூட்டம் மே 8ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் துவங்கியது.

சீன இராணுவ அறிவியல் கழகமும் சீனச் சர்வதேச நெடுநோக்குக் கழகமும் கூட்டாக நடத்திய இக்கூட்டத்தில் 40க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 120 அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகள், நிபுணர்கள், அறிஞர்கள் முதலியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

சர்வதேச ஒழுங்கு மற்றும் சர்வதேசச் சட்டப்படி ஆட்சி, ஆசிய-பசிபிக் பாதுகாப்புக்கான புதிய அறைகூவல், சர்வதேசக் கூட்டுப் பாதுகாப்புக் கடமையைப் பேணிக்காத்தல், இராணுவ ரீதியில் புதிதாக வளரும் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டு அபாயத்திற்கான கட்டுப்பாடு முதலிய கருப்பொருட்கள் இதில் முக்கியமாக விவாதிக்கப்படுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author