இந்தியாவின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்  

Estimated read time 1 min read

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக (CDS) லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் (NSCS) ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் இவர், ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் செயல்படுவார்.
மே 30 ஆம் தேதியுடன் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் ஜெனரல் அனில் சவுகானுக்குப் பதிலாக, சுப்ரமணி இந்தப் பொறுப்பை மிக விரைவில் ஏற்றுக்கொள்வார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவத் துணைத் தளபதியாகப் (VCOAS) பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது மிக உயரிய ராணுவப் பொறுப்பிற்குத் திரும்பியுள்ளார்.

You May Also Like

More From Author