2026 உலகக் கோப்பை கால்பந்து: மூன்று நாடுகளில் மூன்று பிரம்மாண்ட தொடக்க விழாக்கள்  

Estimated read time 0 min read

ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரானது, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளிலும் தலா ஒரு தொடக்க விழா என மொத்தம் மூன்று பிரம்மாண்டமான கொண்டாட்டங்களைக் கொண்டிருக்கவுள்ளது.
ஜூன் 11 அன்று மெக்சிகோ சிட்டி மைதானத்தில் (அஸ்டெகா மைதானம்) நடைபெறும் முதல் ஆட்டத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாக முதல் தொடக்க விழா நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து ஜூன் 12 அன்று கனடாவின் டொராண்டோவிலும், அதே நாள் மாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் அடுத்தடுத்த தொடக்க விழாக்கள் நடத்தப்படும் என்று ஃபிஃபா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விழாக்கள் அந்தந்த நாடுகளின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் கால்பந்து விளையாட்டின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமையும் என பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author