சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட கூட்டம் 25ஆம் நாள், சின்ஜியாங்கின் மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பிரதிநிதிக் குழுவின் தலைவர் வாங் ஹூநிங் இதில் உரைநிகழ்த்துகையில், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70 ஆண்டுகளில் தலைசிறந்த சாதனைகள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், தேசிய இன பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த சரியான பாதையின் வலிமையான உயிர் ஆற்றல் இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நவீனமயமான கட்டுமானத்தின் புதிய வரலாற்று துவக்கப் புள்ளியில் சின்ஜியாங் நிற்கிறது. ஷிச்சின்பிங்கின் புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சிந்தனை என்ற வழிகாட்டலின் அடிப்படையில், புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்ஜியாங் ஆட்சிமுறை திட்டத்தை முழுமையாகவும் சீராகவும் நடைமுறைபடுத்த வேண்டும். ஒன்றுமை, நல்லிணக்கம், செழுமை, செல்வம், நாகரிகம் முன்னேற்றம், பொது மக்கள்
அமைதியாக வாழ்வது, அருமையான உயிரின வாழ்க்கை முதலியவை கொண்ட சோஷலிசத்துடன் கூடிய நவீனமயமான சின்ஜியாங்கை உருவாக்க முயற்சி செய்வோம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.