தமிழகம் அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதன் முதலாக வந்தே மாதரம் இசைக்கப்பட்டது அரசியல் மாற்றமாக கருதப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுக அரசை வீழ்த்தி தவெக வெற்றி பெற்றது. இந்தநிலையில், விஜய் தலைமையிலான தவெக அரசு இன்று பதவியேற்றது. ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
அவருடன் சேர்ந்து 9 தவெக அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக பதவியேற்வு விழாவின் துவக்கத்தில், இறுதியில் முதலாவதாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. வந்தே மாதரம் இசைக்கப்பட்டு, தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
