திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் தரிசனம்!

Estimated read time 0 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, குடியரசு துணை தலைவரை தேவஸ்தான அதிகாரிகள் கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.

இதையடுத்து குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

You May Also Like

More From Author