தமிழகத்தில் நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அறிவிப்பு!  

Estimated read time 0 min read

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது வானிலை தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது.
தெற்கு கடலோர ஆந்திரப்பிரதேசத்திற்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக சுமார் 3.1 கிலோமீட்டர் முதல் 4.5 கிலோமீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மாநிலத்தின் வறண்ட வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, பரவலாக மழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது தற்போதைய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author