நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் பாதுகாவலனாக, உற்ற தோழனாக, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற மகாகவியின் வாக்கிற்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்டத்தில் என் மண் என் மக்கள் பயணத்தின்போது, உலகிற்கெல்லாம் உணவளிக்கும் நமது விவசாயப் பெருமக்களைச் சந்தித்து, அவர்களுக்குப் “பாத பூஜை” செய்யும் பாக்கியம் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற மகாகவியின் வாக்கிற்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைய #EnMannEnMakkal பயணத்தின்போது, உலகிற்கெல்லாம் உணவளிக்கும் நமது விவசாயப் பெருமக்களைச் சந்தித்து, அவர்களுக்குப் “பாத பூஜை” செய்யும் பாக்கியம் கிடைத்ததைப் பெருமையாகக்… pic.twitter.com/ZIjbcQ2tXI
— K.Annamalai (@annamalai_k) February 6, 2024
இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த தமிழக பாஜக விவசாய அணி மாநில தலைவர் GK நாகராஜ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகளின் பாதுகாவலனாக, உற்ற தோழனாக, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவரும், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாரதம் முழுவதும் உள்ள விவசாயிகளின் நல்வாழ்வுக்கு உறுதுணையாக என்றும் இருப்பார் என்ற நம்பிக்கையை, விவசாயப் பெருமக்களிடம் உணர முடிந்தது எனத் தெரிவித்தார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                                 
                                                 
                                                