தவெக அரசு அமைதி காப்பது எதனால்?- கனிமொழி

Estimated read time 1 min read

இன்று நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதோடு, தமிழ்நாட்டின் மரபில் இல்லாத வந்தே மாதரம் முதலாவதாக இசைக்கப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் இதேபோன்ற அவமதிப்பு நடந்தபோது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையான கண்டனத்தை பதிவு செய்ததோடு, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுத் தரப்பில் உத்தரவாதமும் அளிக்கப்பட்டது.

ஆனால், இன்று மைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதோடு, தமிழ்நாட்டின் மரபில் இல்லாத வந்தே மாதரம் முதலாவதாக இசைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கனிமொழி எம்பி, “இரண்டாவது முறையாக தவெக அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில் மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது. சென்ற முறை இதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்ட போது, ‘இனி அவ்வாறு நடக்காது’ என்று கூறிய தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

You May Also Like

More From Author