‘த்ரிஷ்யம்’ 4 மற்றும் 5ஆம் பாகங்கள் தயார்? மோகன்லால் வெளியிட்ட மாஸ் அப்டேட்  

Estimated read time 1 min read

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013ல் தொடங்கி இன்று வரை திரில்லர் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருக்கும் ‘த்ரிஷ்யம்’ தொடரின் மூன்றாம் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய மோகன்லால், “ஜார்ஜ்குட்டியை எப்படியாவது காப்பாற்றுமாறு பலமுறை கேட்டேன், ஆனால் அவர் இன்னும் முழுமையாகக் காப்பாற்றப்படவில்லை.
எனவே, நீங்கள் த்ரிஷ்யம் 4ஐயும் தாராளமாக எதிர்பார்க்கலாம்” என்று ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தார்.
ஒரு தற்காப்புக்காகக் கொலையைச் செய்துவிட்டு, தனது குடும்பத்தைக் காப்பாற்ற ஜார்ஜ்குட்டி நடத்தும் அறிவுப்பூர்வமான போராட்டங்கள் இன்னும் பல பாகங்களாகத் தொடரும் என்பதை மோகன்லாலின் இந்தப் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author