மக்களின் தலைவர் | ஆழமான அன்பு

Estimated read time 1 min read

வாழ்க்கையின் சாதாரண தருணங்களில் தாயின் ஆழமான அன்பு மறைந்திருக்கிறது.

1969ஆம் ஆண்டு ஜனவரியில், ஷிச்சின்பிங் கிராமத்தில் உழைக்கவும் வாழவும் வடக்கு ஷாஆன்சி மாகாணத்தின் லியாங்ஜியாஹே கிராமத்துக்குச் சென்றார். தொலைதூரத்துக்குச் செல்லும் மகன் பற்றி தாய் கவலைப்படுவது வழக்கம். ஷிச்சின்பிங்கின் தாய் ச்சீ சின், அவருக்கு தையல் பை ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தார். அதில் ‘தாயின் மனம்’ என்பதை வெளிப்படுத்தும் மூன்று எழுத்துக்கள் பூவேலை செய்யப்பட்டன.

7 ஆண்டுகால அறிவார்ந்த உழைப்பாளர் வாழ்க்கையில், அந்த சிறிய பை எப்போதும் ஷிச்சின்பிங்குடன் இருந்து, அவரது முன்னேற்றத்திற்கு சாட்சியாக விளங்கியது. அந்த பகுதியில் தான், அவர் பொது மக்களுடன் ஒன்றிணைந்து, தனது வாழ்க்கையை சரியான திசையில் மேற்கொண்டார். பொது மக்களுக்கு சேவை செய்வதற்கும் தாய்நாட்டிற்காக தன்னை அர்ப்பணிப்பதற்குமான தனது ஆரம்பக் குறிக்கோளையும் பொறுப்பையும் அவர் உறுதிப்படுத்தினார்.

ச்சீ சின் ஒரு அன்பான தாய் மட்டுமல்ல, போரின் சோதனைகளைக் கடந்த ஒரு புரட்சிகர வீராங்கனையும் ஆவார். ஷாஆன்சி-கான்சு-நிங்ஷியா எல்லைப் பகுதியில் பல ஆண்டுகள் அடிமட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், பொது மக்களுடன் ஆழமான உறவைக் கொண்டிருந்தார். அவரது சொற்களும் செயல்களும், ஷிச்சின்பிங்கிற்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு புரட்சிகர குடும்பத்தில் பிறந்ததில் ஷிச்சின்பிங் மிகவும் பெருமை அடைகிறார். நல்ல குடும்பச் சூழலில் வளர்ந்த அவர், எப்போதுமே பொது மக்களைத் தனது மனதிலுள்ள மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளார். ‘மக்களின் நலனுக்காக சேவை செய்வதே மிகப்பெரிய சாதனை’ என்பதையும், ‘சொந்த பெற்றோரை நேசிப்பது போல் மக்களை நேசித்து, அவர்களின் நலன்களுக்காக பாடுபடவும், மக்களை நல்ல வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லவும் வேண்டும்’ என்பதையும் அவர் எப்போதும் கடைப்பிடித்து செயல்பட்டு வருகிறார்.

ஷிச்சின்பிங் தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகு, ச்சீ சின் அடிக்கடி அவருக்கு கடிதங்களை எழுதி, தன்னைத்தானே கண்டிப்புடன் இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ‘நன்றாக வேலை செய்வது, நன்றாக படிப்பது, எல்லாவற்றையும் ஒழுங்காக கையாள்வது’ என்பது ச்சீ சினின் பொன்மொழியாகும். மேலும் இது தனது குழந்தைகள் மீதான அவரது எதிர்பார்ப்புமாகும்.

You May Also Like

More From Author