2023ஆம் ஆண்டு சீனாவின் பசுமை வர்த்தக வளர்ச்சி பற்றிய அறிக்கை ஆகஸ்ட் 29ஆம் நாள் வெளியிடப்பட்டது.
சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக் கழகத்தின் புதிய ஆய்வு சாதனைகளில் இதுவும் ஒன்றாகும்.
இவ்வறிக்கையின்படி, 2013 முதல் 2022ஆம் ஆண்டு வரை சீனாவின் பசுமை வர்த்தக அளவு ஆண்டுக்கு சராசரியாக 3.18 விழுக்காடு வளர்ச்சியுடன், உலகளவில் வகிக்கும் பங்கு 2.3 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.
தற்போது, உலகப் பொருளாதார மயமாக்கல் தடுக்கப்பட்டுள்ள நிலையில், பசுமை வர்த்தக வளர்ச்சி பல அழுத்தங்களைத் சந்தித்துள்ளது. 2013 முதல் 2022ஆம் ஆண்டு வரை உலக சுற்றுச்சூழல் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சிறிது ஏற்றத்தாழ்வுடன் ஆண்டுக்கு சராசரியாக 0.85 விழுக்காட்டில் அதிகரித்துள்ளது.
சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இத்துறையில் முதல் மூன்று இடங்களை நிலைநிறுத்தி வருகின்றன.
சீனாவின் கிழக்கிலுள்ள கடலோர பகுதியில் பசுமை வர்த்தகம் விறுவிறுப்பாக உள்ளது. மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் பசுமை வர்த்தக்கின் பங்கு குறைவாக உள்ள போதிலும், அதிக வேகம் மற்றும் உள்ளார்ந்த ஆற்றலுடன் வளர்ந்து வருகிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.