முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் : விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தங்கராமன்

Estimated read time 0 min read

முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தங்கராமன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தங்கராமன் தலைமையில் மாவட்டச் செயலாளர் தீபன் முத்தையா, தொழில் முனைவோர் பிரிவு மாவட்ட தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மூக்கையா தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பின்னர், ஊர்வலமாகச் சென்று முருகன் கோயிலில் வேல் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதன் பின் பேட்டியளித்த தங்கராமன், முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும், தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தின் ஒரு பகுதியாக இது நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author