தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் மிகவும் கலகலப்பாகப் பேசிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
விழாவில் பேசிய ரேவந்த் ரெட்டி, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடிக்கு மன்மோகன் சிங் அரசு முழு ஒத்துழைப்பு அளித்ததைச் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், தற்போது பிரதமராக இருக்கும் மோடி, தெலங்கானா மாநிலம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் ‘தெலங்கானா மாதிரி’ வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு குஜராத்திற்கு வழங்கிய அனைத்தையும் தெலங்கானாவிற்கும் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஆனால், அப்படிச் செய்தால் தற்போது தெலங்கானா பெற்று வரும் நிதி பாதியாகக் குறைந்துவிடும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட பிரதமர், தெலங்கானா இன்னும் பெரிய உயரங்களை எட்ட தன்னுடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது என்று சூசகமாகத் தெரிவித்தார்.
#WATCH | Hyderabad, Telangana: Chief Minister Revanth Reddy says, “When Manmohan Singh was the PM, Narendra Modi was the CM of Gujarat, he developed the Gujarat model in 10 years for the nation. Today, the people of Telangana also have the same hope. When he is the PM, the people… pic.twitter.com/mdWFm0XVXn
— ANI (@ANI) May 10, 2026
“>
அரசியலைக் கடந்து வளர்ச்சியில் கவனம் செலுத்தப் போவதாக இருவரும் கூறியதுடன், 2047-க்குள் ‘வளர்ந்த இந்தியா’ இலக்கை எட்ட தெலங்கானா முக்கியப் பங்காற்றும் என்றும் உறுதி அளித்தனர்.
