சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் ஏப்ரல் 30ஆம் நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அவர் கூறுகையில், சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் அமெரிக்க அரசு தலைவர் டிரம்ப் ஆகியோரின் உத்திநோக்கு வழிகாட்டலின் கீழ், சீனா-அமெரிக்கா உறவு பொதுவாக நிலையாக இருந்து வருகின்றது என்றார். இருதரப்பும் இந்த மதிப்புமிக்க நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும், முக்கியமான உயர்மட்ட தொடர்பு நிகழ்ச்சி நிரலுக்கு நன்கு தயாராகவும், ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, கருத்து வேறுபாடுகளை கட்டுப்படுத்தவும், உத்திநோக்கு, பயன் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த சீனா-அமெரிக்கா உறவின் உருவாக்கத்தை ஆய்வு செய்யவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தைவான் விவகாரம் சீனாவின் முக்கிய நலன்களுடன் தொடர்புடையது என்றும், அமெரிக்கா தனது வாக்குறுதியை கடைப்பிடித்து சரியான முடிவு எடுக்க வேண்டும் என்றும் வாங் யீ வலியுறுத்தினார்.

மேலும், மத்திய கிழக்கின் நிலைமை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author