துருக்கி, ஆஸ்திரியா, பிரிட்டன், ஈராக் முதலிய 18 நாடுகளைச் சேர்ந்த சீனாவுக்கான தூதர்கள் சமர்ப்பித்த அதிகாரப் பத்திரங்களை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 16ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் ஏற்றார்.
அப்போது அவர் கூறுகையில்,
உங்கள் நாட்டு தலைவருக்கும் மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவியுங்கள். நீங்கள், சீனாவில் அதிகமாக பயணம் மேற்கொண்டு உண்மையான சீனாவை அறிந்து கொண்டு, சீனாவுக்கும் பல்வேறு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை ஆழமாக்குவதற்குப் பங்காற்ற வேண்டும்.
தற்போதைய உலக நிலைமை வேகமாக மாறி வருகின்றது. அறைகூவல்கள் தீவிரமாகியுள்ளன. வரலாற்று உண்மைகளில் ஊன்றி நிற்கும் சீனா, பல்வேறு நாடுகளுடன் இணைந்து, மனிதகுல பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைக்கும் என்றார்.
