சரக்குகளை ஏற்றிச்செல்லும் சீனாவின் தியான்சோ-10 சரக்கு விண்கலம் வன் ச்சாங் விண்வெளி ஏவுதல் மையத்திலிருந்து 11ம் நாள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதனையடுத்து, தியான்சோ-10 விண்கலம், விண்வெளி சுற்று வட்டப் பாதையில் இயங்கி வரும் விண்வெளி நிலைய அமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.
தியான்சோ-10 சரக்கு விண்கலம் மூலம், ஒரு விண்வெளி உடை, விண்வெளி நிலையத்தில் தங்கப் பயன்படுத்தக் கூடிய பொருட்கள், உந்து பொருட்கள், பரிசோதனை சாதனங்கள் முதலியவை ஏற்றிச்செல்லப்பட்டன.
