சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யி நவம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு ஆணைத்தின் துணை செயலாளர் பாகெரியைச் சந்தித்தார்.
தற்போது, மத்திய கிழக்குப் பிரதேசத்தில் போர் நீடிப்பது பற்றி, வாங்யி கூறுகையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார். மத்தியக் கிழக்கு நிலைமையைத் தணிவுப்படுத்தும் வகையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த முன்மொழிவுகள் மற்றும் கருத்துகளின்படி சீனா, பல்வேறு தரப்புகளுடன் பிரதேச அமைதியை மீட்டெடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
பாகெரி கூறுகையில், சொந்த நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டை ஈரான் உறுதியாகப் பேணிக்காத்து, ஆதிக்கம் மற்றும் அச்சுறுத்தலைத் தடுப்பதோடு, பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், பிரதேச அமைதி மற்றும் நிதானத்தை நனவாக்குவதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
