சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக கவுன்சிலையும் முதலீட்டு கவுன்சிலையும் உருவாக்குவது குறித்த கேள்விக்கு சீன வணிக அமைச்சகம் பதிலளிக்கையில், வர்த்தக கவுன்சிலின் கட்டமைப்பு, செயல்பாடு, இயக்க முறை உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து இருதரப்பின் பொருளாதார மற்றும் வர்த்தக குழுக்களும் தொடர்பை பேணி வருகின்றன என்றும், இருதரப்பிலும் தலா 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவிலான பரஸ்பர சுங்கவரி குறைப்புக்கான ஏற்பாட்டுப் பணியை முன்னேற்ற விவாதித்து வருகின்றன என்றும் தெரிவித்தது.
சுங்கவரி குறைப்பு ஏற்பாடுகள் குறித்து, உள்நாட்டு நிறுவனங்கள், வணிகச் சங்கங்கள், உள்ளூர் அரசுகள், அமெரிக்க முதலீடு பெற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலிருந்து சீனா கருத்துகளை கோரி வருகிறது. அதே நேரத்தில், வர்த்தக கவுன்சில் மற்றும் பரஸ்பர சுங்கவரி குறைப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அமெரிக்க தரப்பு கோரி வருகிறது. இருதரப்பும் நெருங்கிய தொடர்பை பராமரித்து, குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கான சுங்கவரி குறைப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து, அவற்றை விரைவில் செயல்படுத்தி, இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
