சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜூன் 26ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் ஆசிய அடிப்படை வசதி முதலீடு வங்கியின் 10ஆவது செயற்குழுவின் ஆண்டுக் கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
ஆசிய அடிப்படை வசதி முதலீடு வங்கியின் எதிர்கால வளர்ச்சி குறித்து அவர் விருப்பம் தெரிவித்தார். முதலில், உலகப் பொருளாதார வளர்ச்சி இன்னல் மிக்க நிலையில் சிக்கிக் கொள்வதை எதிர்நோக்கி, உறுப்பு நாடுகள் வளர்ச்சி திறனை வலுப்படுத்துவதைப் பெரிதும் ஆதரிக்க வேண்டும். இரண்டு, பொருளாதார வர்த்தக கட்டமைப்பின் மறு உருவாக்கத்தை எதிர்நோக்கி, சர்வதேச உரையாடல் மற்றும் பரிமாற்றத்தை மேலதிகமாக அதிகரிக்க வேண்டும். மூன்று, உலக மேலாண்மையில் ஏற்பட்டுள்ள அறைகூவல்களை எதிர்நோக்கி, தன் புதிய ரக பலதரப்பு மேடையின் பங்கினை மேலும் சீராக வெளிக்கொணர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஆசிய அடிப்படை வசதி முதலீடு வங்கியின் தலைவர் ஜின் லீசுன், உறுப்பு நாடுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 2500 பேர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.