அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்காகத் தனது மூன்று நாள் பயணமாகப் பெய்ஜிங் புறப்பட்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர், உலகளாவிய எண்ணெய் சந்தை சரிவு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மே 13 முதல் மே 15 வரை நடைபெறும் இந்தப் பயணத்தின் போது, வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இரு நாட்டுத் தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.
கடந்த 2025 அக்டோபரில் கொரியாவின் புசான் நகரில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு, ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை.
அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க மூன்று நாள் பயணமாக சீனா புறப்பட்டார் டிரம்ப்
