2025-ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தொடர்புக் குழுவின் 2-ஆவது கூட்டம் ஏப்ரல் 10, 11ஆகிய நாட்களில் காணொலி மூலம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் “பரஸ்பர வரி” கொள்கை குறித்து பிரிக்ஸ் நாட்டு உறுப்பினர்கள் ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். தொடர்புடைய நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பதற்றமான வர்த்தகச் சூழ்நிலையில் அவர்கள் பெரும் கனவம் செலுத்திய அதேவேளையில், ஒருதரப்புவாதம் மற்றும் வர்த்தகப் பாதுகாப்புவாதத்தைக் கூட்டாக எதிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
அமெரிக்காவின் “பரஸ்பர வரி” விதிப்பு, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைக்குக் கடுமையாக மீறி, உலகப் பொருளாதார அதிகரிப்பைப் பாதித்து, பல்வேறு வளரும் நாடுகளின் நலன்களைச் சீர்குலைக்கும். பிரிக்ஸ் நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்தக் கருத்துகளை வெளியிட வேண்டும்.
பல்வேறு தரப்புகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறையின் பிரச்சினை குறித்து கருத்துகளைப் பரிமாறி, விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காத்து, தற்போதைய உலகளவில் பதட்டமான வர்த்தக நிலைமையைக் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்றும் பிரிக்ஸ் நாட்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தவிரவும், பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரக் கூட்டாளி நெடுநோக்கு 2030 என்ற திட்டத்தை வகுப்பது, புள்ளிவிவரப் பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்பது, பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர்.