சீன வாகன தொழில் துறை சங்கம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டின் ஜனவரி திங்களில், சீனாவில் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை முறையே 10 இலட்சத்து 15 ஆயிரத்தையும் 9 இலட்சத்து 44 ஆயிரத்தையும் எட்டியுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்ததை விட முறையே 29 விழுக்காடு மற்றும் 29.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. புதிய எரியாற்றல் வாகனங்களில் புதிய வாகனங்களின் விற்பனை, மொத்த வாகன விற்பனையில் 38.9 விழுக்காட்டை எட்டியுள்ளது.
இதே காலத்தில், சீனாவின் ஏற்றுமதி வாகனங்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 70 ஆயிரமாகும். இது, கடந்த ஆண்டை விட 6.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஜனவரியில் சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை உயர்வு
