சனாதனம் பற்றி உதயநிதி பேசியதற்கு மக்கள் தேர்தலில் தக்க பதில் அளித்துவிட்டனர் – RSS பொதுச்செயலாளர்..!!

Estimated read time 0 min read

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார்.

தனது பேச்சில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசிய அவர், மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி உரையை முடித்தார்.

அவரின் இந்த சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், உதயநிதியின் இதுபோன்ற பேச்சுகளுக்காகத் தான் தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் பதில் அளித்துவிட்டனர் என்று ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அதன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொஸ்பேலா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது; அது அவரின் (உதயநிதி) கருத்து. அதற்கான பதிலைத்தான் சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்துவிட்டனர்.

சனாதனம் ஒரு போதும் அழிந்துவிடாது என்பது மட்டும் உறுதி. நாட்டின் உயிர்த்துடிப்பும், ஆன்மாவும் சனாதனம் தான். வெறும் மதத்தை துதிபாடுவது அல்ல… இது ஒரு விழுமியம். அழியாத, முடிவில்லாதது. சனாதனம் ஒரு ஆலமரம் போன்றது. ஆண்டாண்டுகள் கடந்தாலும் அது கம்பீரமாக நிலைத்து நிற்கும். அதன் வேர்கள் ஆழமாகவும், வலிமையாகவும் வேரூன்றி உள்ளன. அந்த மரம் என்றுமே புத்துணர்ச்சியாக தான் இருக்கும்.

இவ்வாறு தத்தாத்ரேயா ஹொஸ்பேலா கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author