மாநில மற்றும் அமைச்சர் நிலை தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வின் குறிக்கோளைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவதற்கான பயிலரங்கு ஜனவரி 20ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி பள்ளியில் தொடங்கியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இப்பயிலரங்கின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். இந்த முழு அமர்வின் குறிக்கோளை ஆழ்ந்த முறையில் கற்றுக் கொண்டு செயல்படுத்தி, 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் சிறந்த தொடக்கத்தை முயற்சியுடன் நனவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஐந்தாண்டு திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்துவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமுறைக்கு முக்கியமான அனுபவமாகும். சீனத் தனித்திறப்புடைய சோஷலிச அமைப்புமுறைக்கு அரசியல் ரீதியிலான முக்கியமான நன்மையாகும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில் 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்ட உத்தி நோக்கு ஏற்பாடுகளை பன்முகங்களிலும் ஆழ்ந்த முறையில் துல்லியமாகவும் புரிந்து கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
நவீன தொழில் முறைமையைக் கட்டமைத்து இம்முறைமையின் நிலை உயர்வை நனவாக்குவது, 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் முக்கிய உத்தி சார் கடமையாகும். இத்திட்டத்துக்கான இலக்குகள் மற்றும் கடமைகளை தடையின்றி நிறைவேற்றுவதற்கு, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை வழிநடத்தும் கட்சியின் திறமை மற்றும் நிலையை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
