சீனா மற்றும் ஹாங்காங்கில் செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது ஊழியர்களை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
மாறாக, தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களாக இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் ஐபோன் 15 ஐ வழங்கி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, சீனாவில் உள்ள மைக்ரோசாப்ட் ஊழியர்கள் செப்டம்பர் 2024 க்குள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலிருந்து ஐபோன்களுக்கு மாறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் சீனா ஊழியர்களுக்கு அனுப்பிய உள் குறிப்பில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் ஹாங்காங் அலுவலகத்திலும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.