சென்னையில் பல வீடுகளுக்கு சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்து வந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கட்டிடங்களின் ஆண்டு வாடகை மதிப்பின் அடிப்படையில் சொத்து வரி கணக்கிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா நகர் பகுதியில் கடந்த ஆண்டு ரூ. 5,000 சொத்து வரி செலுத்திய கட்டிட உரிமையாளருக்குத் தற்போது ரூ. 28,000 வரி விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வித முன் அறிவிப்பும் இன்றி சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் சொத்து வரி உயர்வு? சென்னை மாநகராட்சி ஆணையர் கூறிய விளக்கம்
