சீனாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ஜூ ரோங்ஜி உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலை பெய்ஜிங்கில் காலமானார். அவருக்கு வயது 98.
இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது மற்றும் 15ஆவது மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். அன்னாரின் மறைவுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி, சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி, சீன அரசவை, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி ஆகியவை இரங்கல் தெரிவித்துள்ளன.
இரங்கல் செய்தியில், ஜூ ரோங்ஜி ஒரு சிறந்த கட்சி உறுப்பினராகவும், விசுவாசமான கம்யூனிஸ்ட் போராளியாகவும், பாட்டாளிப் புரட்சியாளராகவும், ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் செயல்பட்டார் என புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
