கூட்டாட்சி அரசின் சாதனங்களில் குறும் காணொலி சமூக வலைத்தளமான டிக்டாக்கைப் பயன்படுத்தும் தடையை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் டிக்டாக் அலுவல்கள் மறுக்கட்டமைக்கப்பட்ட பின் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்பது அதற்கான காரணமாகும் என்று அமெரிக்க ப்ளூம்பெர்க் 11ஆம் நாள் அறிவித்தது.
அதற்கு முன்பு, அமெரிக்க சட்ட அமைச்சகம் வெளியிட்ட ஓர் ஆவணத்தில், டிக்டாக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய செயலிகளின் பட்டியலில் சேராது என்று கூறியது.
2022ஆம் ஆண்டின் இறுதி முதல் இது வரை, கூறப்படும் ”தரவுகளின் பாதுகாப்பை” காரணமாகக் கொண்டு, அரசின் மின் சாதனங்களில் டிக்டாக் பயன்பாட்டை அமெரிக்க கூட்டாட்சி அரசும் பல மாநிலங்களும் தடை செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
