சீனாவில் பயணம் மேற்கொள்ளலாம்:எலான் மஸ்க்

Estimated read time 0 min read

டெஸ்லா நிறுவனத்தின் சிஇயிஓ எலான் மஸ்க் அண்மையில் சமூக ஊடகத்தில் இணையப் பயன்பாட்டாளருக்குப் பதிலளித்த போது கூறுகையில்,

சீனா, மிகவும் அற்புதமான நாடாக விளங்குகிறது. சீனாவில் அனைவரும் பயணம் மேற்கொள்ளலாம் என்று நான் மிகவும் பரிந்துரை செய்கின்றேன் என்றார்.

இதனிடையே, அவரது தாய் இக்கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட போது கூறுகையில்,

சீனாவில் தங்கும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். மகிழ்ச்சியாக இருந்தேன். எனவே, சீனாவில் பயணம் மேற்கொண்டு அனுபவிக்கலாம் என்றார்.

இதற்கு முன்பு, எலான் மஸ்க் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறுகையில்,

சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், எதிர்காலத்தில் குறிப்பிட்ட தருணத்தில், இத்தொழில் துறையின் தலைவராக மாறும். சீனாவின் மின்சார வினியோக ஆற்றலின் திறன், அமெரிக்காவை விட வெகுதொலைவாக முன்னிலையில் உள்ளது. ரோபோக்களை அதிகமாக உற்பத்தி செய்யும் திறனும் சீனாவுக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author