சீன வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜுலை மாதத்தில் சீனாவில் 10 லட்சத்து 43 ஆயிரம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது முந்தைய மாதத்தை விட 0.6 சதவீதமும், கடந்த ஆண்டில் இதேக்காலத்தை விட 81.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதில், 5 லட்சத்து 53 ஆயிரம் புதியாற்றல் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது முந்தைய மாதத்தை விட 5.7 சதவீதமும், கடந்த ஆண்டை விட 145.5 சதவீதமும் அதிகரித்துள்ளது.
சீனாவின் வாகனங்களின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சிக்கு, உலகின் மிக முழுமையான வாகன தொழிற்துறை சங்கிலியை சீனா கொண்டிருப்பது காரணமாகும் என்று சீன வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
