யுனெஸ்கோ பொது இயக்குநருடன் பெங் லியுவான் சந்திப்பு

Estimated read time 1 min read

 

சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவியும், யுனெஸ்கோவின் சிறுமிகள் மற்றும் பெண்கள் கல்வி மேம்பாட்டிற்கான சிறப்புத் தூதருமான பெங் லியுவான் பெய்ஜிங்கில் மே 12ஆம் நாள் முற்பகல் யுனெஸ்கோ பொது இயக்குநர் எனானியுடன் சந்திப்பு நடத்தினார்.

யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக எனானிக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, உலகெங்கிலும் சிறுமிகள் மற்றும் பெண்கள் கல்வியின் வளர்ச்சிக்கு யுனெஸ்கோவின் முக்கியப் பங்கையும் பெங் லியுவான் பாராட்டினார். மேலும், சீனாவில் சிறுமிகள் மற்றும் பெண்கள் கல்வியின் சாதனைகளை அறிமுகப்படுத்திய பெங் லியுவான், சிறப்புத் தூதரின் கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்கும், உலகளவில் சிறுமிகள் மற்றும் பெண்கள் கல்வியின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஊக்குவிக்க யுனெஸ்கோவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அவரது விருப்பத்தை தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author